தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்களின் 27 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை காலை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் மன்னார் மாவட்டக்காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பற்றிக் வினோ தலைமையிலஅனுஸ்ரிக்கப்பட்டது.

-இதன் போது தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் அமரர் சிறி சபாரெத்தினம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அனுவித்து ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

-இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் யேசுதாஸ்,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் மத்திய குழு உறுப்பி கனேசலிங்கம்(சொக்கன்) ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் டெலோ இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா.இதன் போது சிறப்பு உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.









Advertisement

0 comments:

Post a Comment

 
Top