இந்திய மீனவர்கள் 30 பேரையும் தொடர்ந்து இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் உத்தரவிட்டார்.



இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் 30 இந்திய மீனவர்கள் தலை மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் ஐந்து டோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களை கடந்த 6ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் கைது செய்து பின்னர் தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 தலை மன்னார் பொலிஸார் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அவர்கள் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்து 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top