தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைவதற்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


 கட்சி பதிவு தொடர்பில் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையை நிலைநாட்ட மன்னார் ஆயர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி கூடுதல் நலன்களை பெற்றுக் கொள்வதாக ஏனைய கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top