மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பண்ணை வெட்டுவான் கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி பாடசாலை கொப்பிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.
மன்னாரின் பிரபல வர்த்தகரும்,மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் செயலாளருமான சால்ஸ் அவர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி பாடசாலை கொப்பி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக குறித்த கிராமமும் பாதிப்படைந்திந்தது.
இந்த நிலையில் குறித்த கிராம மக்களினால் பாராளுமன்ற உறுப்பினரிடம் மாணவர்களுக்காண பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னாரின் பிரபல வர்த்தகரும்,மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் செயலாளருமான சால்ஸ் அவர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி அப்பியாசக்கொப்பிகள் நேற்று திங்கட்கிழமை அக்கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
அக்கிராமத்தில் உள்ள சகல மாணவர்களுக்கும் தேவையான கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வர்த்தகரும்,மன்னார் மாவட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் செயலாளருமான சால்ஸ்,டெலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ,இந்து முதியோர் அமைப்பின் தலைவர் பவமொழி பவன் ஆகியோர் குறித்த கொப்பிகளை பெற்றோரிடம் கையளித்தனர்.
0 comments:
Post a Comment