இலங்கையில் வதிவிட வீசாவை கோருவோருக்கு கட்டாய மருத்துவ பரிசோதனையை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு புதிய நோய்கள், இறக்குமதி செய்யப்படுவதை தடுக்கும் முகமாகவே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக வதிவிட வீசாவை புதுப்பிக்க விண்ணப்பிபோரிடம் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கோர அமைச்சு தீர்மானித்துள்ளது.
கசநோய், மலேரியா மற்றும் எயிட்ஸ் உட்பட்ட நோய்கள் தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ஐஓஎம் என்ற சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் உதவவுள்ளது.

0 comments:
Post a Comment