எதிர்வரும் வாரங்களில் பால் மாவின் விலை உயர்வடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. பால் மா விலையை உயர்த்த அனுமதியளிக்குமாறு நிறுவனங்கள் நுகர்வோர் அதிகாரசபையிடம் ஏற்கனவே கோரியுள்ளன.

 இதன்படி, 400 கிராம் எடையுடைய பால் மா பக்கட் ஒன்று 50 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மா பக்கட் ஒன்று 100 ரூபாவினாலும் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 நாடு முழுவதிலும் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பதுக்கி வைக்கப்பட்ட சில தொகுதி பால் மா பக்கட்டுகளை நுகர்வோர் அதிகாரசபையினர் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட மாட்டாது என அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top