தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 

 24 மணித்தியாலங்களும் முறைப்பாட்டை மேற்கொள்ளக் கூடிய வகையில் 3 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 011-3071073, 011-2676161, 011-2671977 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும். 

 நாடு முழுவதிலுமுள்ள உணவு விற்பனை நிலையங்களை சோதனையிடவுள்ள சுகாதார அமைச்சினால் இந்த இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த சோதனை நடவடிக்கைகள் நாளை 23ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. 

 இதன்போது வெதுப்பகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மரக்கறி, பழங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட உணவு விற்பனை நிலையங்கள் யாவும் சோதனையிடப்படவுள்ளன.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top