ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னர் அராபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இலங்கையில் தற்போது 40 பெருக்கு மரங்கள் மிகுதியாக காணப்படுகின்றது. அதிலும் சிறப்பாக 34 மரங்கள் எமது மாவட்டமாகிய மன்னாரில் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருக்க மரத்தில் எட்டு இனங்கள் உள்ளன.அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குச் சொந்தமானது. மற்றொன்று ஆபிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இன்னொன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமானதாகும்.
இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது. பெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது.இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும்.
இது மட்டுமன்றி இதில் சேமிக்கப்படும் மழை நீரானது விட்டமின்களை கொண்டது போசணை மிக்கது. பெருக்க மரத்தின் இலை தளிர்களை பண்டைய மக்கள் உணவுக்காக பயன்படுத்தி உள்ளனர் இவ் இலைகள் கீரைகளின் சத்துக்களை உடையது.
இவ் மரங்கள் பெருமளவில் (36) எம் மன்னார் மாவட்டத்தில் காணப்படுவது சிறப்பு மிக்கது , அது மட்டுமன்றி வரலாற்று புகழ் மிக்கது மன்னாருக்கு பெருமளவில் வருகை தருகின்ற உல்லாச பயணிகள் இதனை பார்வை இடுவது மட்டுமன்றி ஞாபகங்களை பகிர புகைப்படங்களையும் எடுத்து செல்கின்றனர்.
இருப்பினும் எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்கின்ற இவ் நீர்ர்க்கலசத்தினை பாதுகாக்க ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இருப்பினும் எம்மோடு மட்டும் அழிந்துவிடாது எமது எதிர் கால சந்ததியினருக்கும் பயன் படும் வண்ணம் இவை சில அமைப்பினரால் இன்று பாதுகாக்கப் படுகின்றது .

.jpg)




.jpg)
.jpg)



%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg)
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments:
Post a Comment