இந்நிகழ்விற்கு கலையருவி இயக்குனரும் மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமை தாங்கினார். மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வீதி விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் ஓர் படைப்பாக இந்தக் குறும்படம் தயாரிக்;கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் வேகம் வேண்டும். அந்த வேகம் படிப்பு, உழைப்பு, இலட்சியம் போன்றவற்றில் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் வீதியில் முன்னே செல்லும் வாகனங்களை முந்திச் செல்வதில் அந்த வேகத்தைக் காட்டும்போது ஏற்படும் விபரீதம் இக்குறும்படத்தில் சொல்லப்படுகின்றது.
இக்குறும்படத்தின் தயாரிப்பாளர் திரு. நிசாந்தன் அவர்கள் மன்னாரில் வசிப்பவர். பாசாலை ஆசிரியர். குவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம் என்று பல்துறைக் கலைஞர். இதற்கு முன்னரும் 'விட்டில் பூச்சி' என்ற பெயரில் மதுபோதை வழிப்புணர்வுப் படம் ஒன்றை எடுத்தவர்.
இந்த நிகழ்வில் வெளியீட்டு உரையை அருட்திரு. வின்சன்ற் பற்றிக் அடிகளார் நிகழ்த்தினார். கருத்துரையை சிரேஸ்ர விரிவுரையாளர் திரு.ஞா. ஜெயசீலன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகரசபையின் உபதலைவர் திரு. எஸ். ஜேம்ஸ், மன்னார் நகரசபை உறுப்பினர் திரு. எஸ். டீலான், வைத்தியர் திரு. கதிர்காமநாதன், வைகுறோ நிறுவனத்தின் நிர்வாக இணைப்பாளர் திரு. எஸ். என். நிமால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படங்களுக்கான விளக்கம்
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமை உரையாற்றுகின்றார்.
அதிதிகள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
அருட்திரு. வின்சன்ற் பற்றிக் அடிகளார் வைத்தியர் கதிர்காமநாதனுக்கு குறும்படத்தின் இறுவட்டு பிரதியை வழங்குகின்றார்.
நகரசபை உதவித் தலைவர் ஜேம்ஸ் உரையாற்றுகின்றார்.
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பிரதிகளை வழங்குகிறார்.
விழாவிற்கு வருகை தந்த மக்கள்
மன்னார் ஆயர் முதன்மை விருந்தினர் உரையாற்றுகின்றார்.
0 comments:
Post a Comment