கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் ஒன்று மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பின்   இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சர்வோதய அமைப்பில் இடம் பெற்றது.


இதன் போது மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மொழிப்பிரச்சினை தொடர்பாகவும்,மன்னார் நகரில் மொழி  நிலையம் ஒன்றை மன்னார் நகர சபையின ஊடாக நிறுவுவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் தமது மொழிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் எனவும்  மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பின்   இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பான விளக்கங்களை சட்டத்தரணி ஹோமாலி வழங்கினார்.
குறித்த நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், நகர சபை,பிரதேச சபைகளின் பிரதிநிதகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top