மன்னார் மாவட்டத்தில் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் ஒன்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது.


 குறித்த கூட்டத்திற்கு உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள்,அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் அரச,தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாகவும்,அவற்றை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதே வேளை காணி உறுதியில் மாற்றம் செய்வது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கான விரிவுரைகளை சட்டத்தரணி எஸ்.வினோதன் மற்றும் ஓய்வு பெற்ற காணி ஆணையாளர் குருநாதன் ஆகியோர் வழங்கினர்.

குறித்த கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

0 comments:

Post a Comment

 
Top