குடும்ப சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக பிறப்பு, இறப்பு மாத்திரமின்றி குழந்தைகளை பிரசவிக்கும் போதான கர்ப்பிணி தாய்மாரின் உயிரிழப்பு வீதத்தை குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவர முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பிரிவின் பணிப்பாளர் டொக்டர் தீப்தி பெரேரா தெரிவித்தார்.
வீடு வீடாக சென்று இலவசமாக இந்த சேவை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, குடும்ப சுகாதார சேவைக்கான யோசனைகள் அடங்கிய மகஜரொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதி பிரதம செயலாளர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள குடும்ப சுகாதாரம் தொடர்பான தேசிய நிகழ்வின் போதே இந்த மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குடும்ப சுகாதார சேவையில் தற்போது ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் வயதெல்லையை 60 வரை அதிகரிக்க வேண்டும் என அரச சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதி பிரதம செயலாளர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

0 comments:
Post a Comment