இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் தொடர்பிலான தகவல்கள் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் பல்வேறு காலப் பகுதிகளில் பதிவானதுடன் கர்ப்பிணித் தாய்மார்கள், பரம்பரை நோய் தொற்றுள்ளவர்கள், வயோதிபர்கள் மற்றும் சிறார்கள் இதன் தாக்கத்திற்கு இலக்காவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக செயற்திறன் குறைந்தவர்களே இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸினால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸ் குறிப்பாக வைரஸ் காய்ச்சலாகவே பரவிச் செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோர் ஏனையோரிடமிருந்து விலகியிருப்பதன் ஊடாக இந்த வைரஸ் பரவுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊடாக 24 மணித்தியாலங்களும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டார்.
இந்த பரிசோதனை நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், பரிசோதனைக்காக அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸ் தாக்கத்திற்குள்ளான 10 கர்ப்பிணித் தாய்மார்கள், கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டா
Home
»
local news
»
special
»
செய்திகள்
» இன்புளுயன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் நாட்டின் பல பகுதிகளிலும் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment