மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானிய முத்திரைகளை குறைப்புச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான  அனுமதியை இது வரை வழங்க வில்லை என கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறைஅமைச்சர் ராஜீத சேனாரத்தின தெரிவித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.


 பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துரை அமைச்சர் ராஜீத சேனாரத்தின தலைமையில் இடம் பெற்ற கடல் தொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தின் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவிக்ககையில்,,,

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துரை அமைச்சர் ராஜீத சேனாரத்தின தலைமையில் கடல் தொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் ஆலோசனைக்கூட்டம் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானிய முத்திரைகள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறைப்புச் செய்யப்பட்டு வரும் விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜீத சேனாரத்தின தான் எது வித மாயக்குறைப்பையும் செய்ய அனுமதி வழங்கவில்லை எனவும்,தொழிலில் ஈடுபடாத படகுகள்,வெளி இணைப்பு இயந்திரங்கள் சம்பந்தமாக அறிக்கை கோரியிருந்ததாகவும்,இரட்டைப்பதிவுகள் மூலம் சில மீனவர்கள் எரிபொருள் மானிய மோசடியில் ஈடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தான் மாணியக்குறைப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top