முல்லைத்தீவு- முள்ளியவளை கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் பல்வேறு பாதீப்புக்களுக்கு முகம் கொடுத்து வரும் தமிழ் மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோதராதலிங்கம் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.


 முள்ளியவளை கிராமத்தில் கடந்த 1972ம் ஆண்டு காடுகளை வெட்டி வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் பின் மீண்டும் இவ்விடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் அங்கிருந்து துரத்திவிட்டு அந்தப் பகுதியில் அரசியல் ரீதியாக மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரின் தலைமையில் மேற்கொள்ளப்படு வருவதாக அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர்.

 மேலும்இ தமிழ் மக்கள் காடுகளை அழிக்கின்றார்கள் எனக்கூறி சுமார் 6 தமிழர்களை வனவள பாதுகாப்புத் துறையினர் கைது செய்து 20 ஆயிரம் சதுரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இராணுவத்தினரால் தொடர்ந்தும் அப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

 இதேபோல் வனவள பாதுகாப்பு துறையினர் தொடர்ச்சியாக இந்தப்பகுதிக்குச் சென்று மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் வனவளத் துறையினரின் வாகனத்தை பார்த்தவுடன் தமிழர்கள் காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும் பரிதாப நிலையில் உள்ளதாகவும் அந்த மக்கள் தெறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு நகரில் பிரத்தியேகமான இடமொன்றில் மக்களை சந்தித்து அவர்களுடைய குறை நிறைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களை சந்தித்தி த்து உரையாடினர்.

 இதன் போது அந்த பகுதிகளில் மீள் குடியேறியுள்ள மக்கள் ஒரு போதும் வெளியெற்றப்பட மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top