நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவருக்கு மன்னார் மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடகடூழிய  சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர்   வழக்கு ஒன்றிற்காக நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த இளைஞன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடுந்தொனியில் சத்தம் போட்டு கூக்குரலிட்டார்.

இதனையடுத்தே குறித்த இளைஞனுக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையையும் மற்றுமொரு வருட கடூழிய சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top