இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் தலைமன்னார் பொலிஸாரிடம் இன்று வியாழக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் 19 பேரையும்; தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை கடற்படையினர் கைதுசெய்ததாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முஹமட் ஜெமில் தெரிவித்தார்.

தலைமன்னார் கடற்கரையிலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் கடல் மைல் தொலைவில் சுமார் 4 படகுகளில் வந்த  19 இந்திய மீனவர்களும் கடற்றொழிலில் ஈடுபட்டனர். இதனை அவதானித்த கடற்படையினர் இந்த மீனவர்களை கைதுசெய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக இந்த மீனவர்களை கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மன்னார் நீதிமன்றத்தில் இந்த மீனவர்களை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முஹமட் ஜெமில் மேலும் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top