மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் அவசர கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் றிஸாட் பதீயுதீன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது மக்களின் இடப்பெயர்வுகள்,பாதிப்பு,நெற் பயிர்ச் செய்கையின் அழிவுகள்,உடைக்கப்பட்ட குளங்கள் ஆகியவை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்கும் வெள்ளத்தின் போது பயண்படுத்தும் தற்காப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், குனைஸ் பாரூக் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர உற்பட திணைக்களங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
(மன்னார் நிருபர் )
0 comments:
Post a Comment