மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் சேதிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக அவசர கலந்துரையாடல் என்ற பெயரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பிரச்சார கூட்டம் இடம் பெற்றதாக அங்கு சென்று ஏமாற்றமடைந்த இளைஞர் யுவதிகள் தெரிவித்தனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலையங்கள் மற்றும் பொது அமைப்புக்களினூடாக பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்காண வேலை வாய்ப்பு தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம் பெற உள்ளதாகவும் அணைத்து பட்டதாரிகளையும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.


இதன் போது கடந்த திங்கட்கிழமை காலை மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது பட்டதாரிகள், மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் கழகங்கள் போன்றவற்றின் பிரதி நிதிகள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியூதீன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தனது முழுமையான கருத்தை வெளியிட்டுள்ளதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top