வடமாகாண கல்வித்திணைக்களத்தினால் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையேயான பெரு விளையாட்டுப்போட்டிகள் மூன்று கட்டங்களாக  நடைபெற்றுவருகின்றது அதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது



இதில் ஆண்களுக்கான 15 வயதுப் பிரிவு மற்றும் பெண்களுக்கான 19 வயதுப் பிரிவு ஆகியோருக்கான் மேசைப்பந்தாட்டப் போட்டிகள் 15 ஆம் 16 ஆம்  17 ஆம் திகதிகளில் மன்னார் சென்.சேவியர் ஆண்கள் கல்லூரியிலும், 15 வயதுப் பிரிவு ஆண்கள்,19 வயதுப் பிரிவுப் பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகள் 15ஆம் 16ஆம் 17ஆம் திகதிகளில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியிலும்.19 வயதுபிரிவு ஆண்,பெண் இருபாலருக்குமான எல்லே போட்டிகள் 17ஆம் 18ஆம் திகதிகளில் மன்னார் முருங்கன் வித்தியாலயத்திலும் 15 வயதுப்பிரிவு,17வயதுப்பிரிவு,19வயதுப்பிரிவு ஆண்,பெண் இருபாலருக்குமான கரப்பந்தாட்டப்போட்டிகள் 18ஆம்,19ஆம்,20ஆம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திலும் 15வயதுப் பிரிவு19 வயதுப் பிரிவு ஆண்,பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டிகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top