மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மஸ்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று  செவ்வாய்க்கிழமை   மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்கலாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மஸ்தியஸ்தர் சபை இணைப்பாளர் சனாதன சர்மா, மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்பு ராஜ் லெம்போட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மஸ்தியஸ்தர் சபையின் தலைவராக ஆர்.பிரின்ஸ் டயஸ் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், மஸ்தியஸ்தர் சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்த 14 பேருக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டு சின்னங்கள் சூட்டும் வைபவமும் இடம்பெற்றது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top