கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் இருவரும்,ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய இருவரும் இவ்வாறு அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வெண்று 11-04- புதன் கிழமை காலை மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்-பற்றிமா ம.ம.வி மாணவன் வை.ஆர்.சிகான் குரூஸ்,மன்-அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா,மற்றும் ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி ஞானதாஸ் மேரி சுரேஸ்கா,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெரோம் எமில் றொசிங்டன் ஆகிய 4 மாணவர்களும் 9ஏ அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர். இதன் போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Advertisement

0 comments:

Post a Comment

 
Top