மன்னார் தினச்சந்தைக்கு முன்பு மீண்டும் புதிய இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அச்சத்தில் உரைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்கனவே இராணுவத்துடைய காவலரண் காணப்பட்டது.

பின் அதிகாரிகளினதும்,அப்பகுதியில் உள்ள திணைக்கள அதிகாரிகளினதும் முயற்சியினால் குறித்த இராணுவ காவலரண் அகற்றப்பட்டது.
தற்போது மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் தீ வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் இராணுவத்தினர் பல்வேறு உதவிகளை மேற்கொண்டனர்.
தற்போது இராணுவத்தினரே மீண்டும் கடையினை அமைத்துக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை சாட்டாக வைத்துக்கொண்டு முதற்கட்டமாக அப்பகுதியில் ஒரு இராணுவ காவலரன் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த காவலரண் சில தினங்களில் பெரிதாக விஸ்தரிக்கப்படும்.
குறித்த தினச்சந்தையில் உள்ள தென் பகுதி வியாபாரிகள் சிலர் இராணுவத்தினருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக குறித்த காவலரன் அமைககப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top