மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் 52 டைனமைட் வெடிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவலுக்கு அமைய சவுத்பார் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போது வெடிப் பெருட்களுடன் 3 சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவரிடம் 17 டைனமைட்களும், மற்றவரிடம் 19 டைனமைட்களும் மூன்றாவது சந்தேகநபரிடம் 16 டைனமைட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment