அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் உள்ளைத்துக்கட்டு தாலமவெட்டை வயல்வெளியில் யானையொன்று உயிரிழந்து காணப்படுவதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஞாயிற்றுக்கிழமை (23) காலை மேற்படி வயல்வெளிக்குச் சென்ற விவசாயிகள், யானை உட்கார்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இந்நிலையில், இது தொடர்பில் வன இலாகா திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top