பொலிஸ் மாவீரர்கள் தினம் இன்று மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் நினைவு கூறப்பட்டது.

150வது பொலிஸ் மாவீரர்கள் தின நிகழ்வுகள் இன்று நாடு பூராகவும் நடைபெறுகிறது. இதனை அடுத்து இன்று மன்னாhரிலும் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று காலை 8 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு மன்னார் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துசார தளுவத்த தலைமைதாங்கினார்.

இதன்போது மன்னார் மாவட்ட உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் சரத் குமார ஜோசப் பொலிஸ் கடமையின்போது உயிர்நீத்த பொலிஸ்சாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார் இதனை தொடர்ந்து பொலிஸ் மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் பொலிசாரினால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது













Advertisement

0 comments:

Post a Comment

 
Top