கிளிநொச்சி திருவையாறு பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து வயோதிப்பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த சண்முகநாதன் செல்லம்மா (71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வயோதிபப் பெண் திருவையாற்றிலுள்ள தனது வீட்டினைப் பார்ப்பதற்கு அடிக்கடி செல்வதாகவும்; சனிக்கிழமை அந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும்; தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலயே அவருடைய சடலம் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி கே.திருலோகமூர்த்தி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சவச்;சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
0 comments:
Post a Comment