வவுனியா புளியங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எஹலியகொடையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பஸ்ஸே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ்ஸில் 34 பேர் பயணித்ததாக தெரியவருகின்றது. சம்பவத்தில் எஹலியகொடையைச்சேர்ந்த 32 வயதான கே.கே.அஜந்த என்பவரே மரணமடைந்துளார்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment