மன்னார்- மடு பிரதான வீதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜயசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நான்கு பேர் கொண்ட குழுவினர் இன்று அதிகாலை மன்னார்- மடு பிரதான வீதிக்கு மாறுவேடத்தில் சென்று கஞ்சாவை வேண்டுபவர்கள் போல் நடித்து குறித்த கஞ்சா போதைப்பொருளை மீட்டதோடு இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதி ஒரு கிலோ கிராம் எடை கொண்டது எனவும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து 3 கையடக்கத்தொலைபோசிகள், 2 மோட்டார் சைக்கில்கள்,38 ஆயிரம் ரூபாய் றொக்கப் பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்,இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment