றிசாத் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பிரவேசம் புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கும் என்று கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தாராபுரம் அல்-மினா பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். இதேவேளை திவி நெகும திட்டத்தின் கீழ் 3 கோடி பழ வகை விதைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவை வீட்டு தோட்ட நடவடிக்கைகளுக்காக விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேஇ இந்த திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியாக 25 லட்சம் பழ விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Home
»
mannar news
»
special
»
செய்திகள்
» வடமாகாணத்தின் அபிவிருத்தியில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பிரவேசம் புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கும்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment