''மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்'' ஏற்பாட்டில் மன்னார் பிரஜைகள் குழுவில் கடந்த வியாழன்,வெள்ளி ஆகிய திகதிகளில் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கு அரச காணிகள் வழங்கள் தொடர்பாகவும்,அதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு சிறப்பாக இடம் பெற்றது.
-இந்த நிலையில் அரச திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று சனிக்கிழமை குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகம்,பிரதேச செயலகம் உற்பட அரச திணைக்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
-இந்த நிலையில் குறித்த செயலமர்வில் அரச திணைக்கள அதிகாரிகளை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என இராணுவத்தினரினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக மேலதிக அரசாங்க அதிபர் அரச திணைக்கள பணியாளர்களை குறித்த செயலமர்வில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவித்தல் வழங்கியுள்ளார்.
மேலதிக அரசாங்க அதிபரினால் தனித்தனியே அரச திணைக்களங்களுக்கு தொலைபேசி மூலம் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
-இதனால் அரச திணைக்கள அதிகாரிகள் எவரும் குறித்த செயலமர்வில் கலந்து கொள்ளவில்லை எனவும் இதனால் குறித்த செயலமர்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் டி.பி.சிந்தாத்துரை தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(01-06-2013)
0 comments:
Post a Comment