இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும்' என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.


இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

சீதைக்கு இலங்கையில் கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top