தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடாத்தவுள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தியிடம் பயங்கரவாத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.


 கடந்த 25ஆம் திகதி விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சுகவீனம் காரணமாக குறித்த நாளில் விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியாது என விநாயாகமூர்த்தி அறிவித்துள்ளார்.

 ஜூன் மாதத்தில் ஓர் நாளில் விசாரணைகளுக்கு ஆஜராவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top