இன்று இடம் பெற்ற முசலி இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்று இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கொண்டச்சியினை சேர்ந்த ஜூனைத் ஜரீத் மற்றும் போட்டியிட்ட என்.பரவீஸ் ஆகியோருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் முசலி இமாந்தை கிழக்கு மடு துனுக்காய் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு அதி உயர்ந்த பங்களிப்பினை நல்க கூடியவர்கள் அவர்களது திறமைதுடிப்பு மிக்க செயற்பாடு என்பன வெளிக்காட்டப்பட வேண்டும்.வெற்றி பெறுபவர்கள் தோல்வியடைபவர்களின் மன நிலையினை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் தோல்வி என்பது வெற்றியினை அடைந்து கொள்ள கிடைக்கும் ஒரு படியாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று இடம் பெற்ற இந்த தேர்தலில் என்.பர்வீஸ் 182 வாக்குகளையும ஜூனைத் ஜரீத்-207 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
»
mannar news
»
special
»
செய்திகள்
» இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உயர்ந்த பங்களிப்பினை நல்க கூடியவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment