தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான      அவசரகலந்துரையாடல் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இன்று காலை மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம் பெற்றது.


இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,செயலாளர் மாவை சேனாதிராசா,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி,சுரேஸ் பிரேமச்சந்திரன்,சுமந்திரன்,சிறிதரன்,தமிழர் விடுதலைக்கூட்டனியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி,எஸ்.வினோ நோகராதலிங்கம், புளோட் இயக்கத்தலைவர் சித்தார்த்தன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

-காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமானது.இதன் போது மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை,அருட்தந்தையர்கள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகின் தலைவர்கள்; மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 2.45 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள்  மற்றும் பாராளுமன்ற உறுப்பிர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவ்ர் கஜேந்திர குமார் பொன்னம் பலம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.










Advertisement

0 comments:

Post a Comment

 
Top