மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்களையும் இன்று புதன் கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்டனம் விடுதலை செய்தார்.


 கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்த கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 இந்த நிலையில் மீண்டும் கடந்த 6 ஆம் திகதி குறித்த 30 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இவர்களின் விடுதலைக்கான அனுமதி கிடைக்கப்பெறாததன் காரணத்தினால் குறித்த 30 மீனவர்களையும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்டனம் உத்தரவிட்டிருந்தார்.

 -இந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இவர்களின் விடுதலைக்கான அனுமதி மன்னார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குறித்த 30 மீனவர்களும் இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அவர்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 தற்போது குறித்த மீனவர்களை பெறுப்பேற்ற தலைமன்னார் பொலிஸார் அவர்களை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முஹமட் ஜெமிம் தெரிவித்தார். தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை இந்திய கடற்படையினரிடம் கடல் வழியாக சென்று ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top