மன்னார் நகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் இன்று 12 ஆம் திகதி முதல் எதிர் வரும் 14 தினங்களுக்கு மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தலைமையில் இடம் பெறும் என மன்னார் நகர சபையின் தலைவர் சந்தான் பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.இது தொடர்பில் மன்னார் நகர சபையின் தலைவர் சந்தான் பிள்ளை ஞானப்பிரகாசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
எனக்கு திடீர் உடற்சுகயினம் ஏற்பட்டுள்ளது.இதனால் என்னால் தொடர்ந்து மன்னார் நகர சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நான் சிகிச்சை பெற வேண்டி நிலை ஏற்பட்டுள்ளமையினால் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக மன்னார் நகர சபையின் உப தலைவரான ஜேம்ஸ் ஜேசுதாஸ் அவர்களின் தலைமையில் இன்று 12 ஆம் திகதி முதல் எதிர் வரும் 14 தினங்களுக்கு சபை நடவடிக்கைகள் இடம் பெறும்.
இதற்கு மன்னார் நகர சபையின் சக உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என மன்;னார் நகர சபையின் தலைவர் சந்தான் பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment