குறித்த நிகழ்வு இன்று மாலை 3 மணியளவில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துரை ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்காக உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வருடம் சுமார் 6 மாத காலப்பகுதிக்குள் வரட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் 200 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம்,மருதமடு,கரடிக்கு ளி,காயக்குழி,பாலக்குளி ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கே குறித்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி ருக்சன் ஒஸ்வேல்ட் தெரிவித்தார்.
-குறித்த பணத்தை பெற்றுக்கொள்ளும் பயணாளிகள் குறித்த பணத்தை எவ்வாறு பயண்படுத்த வேண்டும் என்றும் அதற்காண ஆவணங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
-மேலும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராமங்களுக்கு 2 ஆயிரம் லீற்றர் தண்ணீர் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதிஸ்வரன்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் பி.பி.சிந்தாத்துரை,முசலி பிரதேச சபையின் உப தலைவர் எம்.பைரூஸ், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியாளர்; எல்.ஏ.பிறேம் ராஜ், மற்றும் கிராம சேவையாளர்கள் உற்பட பலர்கலந்து கொண்டிருந்தனர்.
(மன்னார் நிருபர் வினோத் )
0 comments:
Post a Comment