மன்னார் சிவபூமி; சைவக்கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்த நிகழ்வான தை மாதத்திற்குரிய நிகழ்வு 06.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்களின் தலைமையில் எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி ஆலய மண்டபத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் இடபக் கொடியை சிவஸ்ரீ வீர விஜயபாபுக்குருக்கள் ஏற்றிவைக்க சிவஸ்ரீ சிவரூபக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.இந்நிகழ்வில் நடனம் கரகாட்டம் சிறப்பு வழக்காடுமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து என்பன இடம் பெற்றன. மேலும் இந் நிகழ்வில் நடாத்தப்படும் பட்டிமன்றம் வழக்காடுமன்றம் என்பவற்றின் மூலம் சமூகத்திற்க்கு தேவையான நல்ல விடயங்களை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள் அவர்கள் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment