மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நீலசேனை கிராமத்தில் தொண்டு  அமைப்புகள் நிர்மாணித்துக் கொடுத்துள்ள வீடுகள் மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையிலுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் 3 இலட்சம் ரூபா செலவில் பல வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ் வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஓடு மற்றும் மரங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. சில வீடுகளில் கூரைகளும் உடைந்து விழும் நிலையில் உள்ளன. 3 இலட்சம் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் குடியமர முடியாத நிலையில் தற்போது உள்ளதாகவும் அம்மக்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல்லின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
 குறித்த வீடுகளுக்கு சுமார் 3 இலட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் அவற்றின் பெறுமதி 2 இலட்சம் ரூபாவிற்கு கூட வராது எனவும் அம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top