மன்னார் நகர சபைக்கு முன்பு மீண்டும் புதிய இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப் பட்டிருக்கின்றது.

குறித்த பகுதியில் ஏற்கனவே இராணுவக் காவலரண் இருந்து வந்த போதிலும் அவசர காலச்சட்டம் நீக்கப் பட்டத்தை அடுத்து காவலரண்,மற்றும் சிறிய சோதனை சாவடிகள் அகற்றப் பட்டிருந்தது.


கடந்த முதலாம் திகதி மன்னார் சந்தை தீப்பற்றியத்தை அடுத்து தற்போது அங்கு பொலிசாரினதும்,இராணுவத்தினரினதும் பிரசன்னம் பாதுகாப்பு எனும் பெயரில் ஆரம்பித்துள்ளது.

இதன் முதற் கட்டமாக அங்கு இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது,மேலும் இன்னும் சில தினங்களில் இது பெரிதாக விஸ்தரிக்கப் படலாம் என எதிர்வு கூறப் படுகின்றது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top